மகாராஷ்டிர முஸ்லிம் அமைச்சர் திடீர் ராஜினாமா!

Share this News:

மும்பை (05 ஜன 2020): மகாராஷ்ட்டிர முஸ்லிம் அமைச்சர் அப்துல் சத்தார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

சிவசேனாவை சேர்ந்த அப்துல் சத்தார் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து வழங்ப்படும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுகுறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே ‘சத்தாரின் ராஜினாமா கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனாவின் இன்னொரு தலைவரான சஞ்சய் ராவத், சத்தாரிடம் முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்தார். உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அப்துல் சத்தார் தனது முடிவை மாற்றிக் கொள்வார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் சத்தார், அக்கட்சியிலிருந்து விலகி சிவசேனாவில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply