முஸ்லீம் பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற ராஜேஷ் என்பவர் கைது!

திருவனந்தபுரம் (21 டிச 2021): பாஸ்போர்ட்டில் மோசடி செய்து 10 ஆண்டுகளாக முஸ்லீம் அடையாளத்துடன் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வந்த ராஜேஷ் (47) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுள்ளார் .

ஷெரின் அப்துல் சலாம் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜேஷ் கடந்த 2006-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு சென்றதாக கிளிமானூர் காவல் நிலையத்தில் 2019 இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை தேடிவந்த நிலையில், ராஜேஷ் வளைகுடாவில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் ராஜேஷ் டிசம்பர் 15 அன்று வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தபோது விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.

பின்பு ராஜேஷ் அட்டிங்கல் ஜூடிசியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜேஷுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும், வெளிநாட்டில் 10 வருடங்களாக முஸ்லிம் போலவே நடித்து பணிபுரிந்து செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...