மங்களூரு ஆட்டோ மர்ம பொருள் வெடிப்பு விபத்து அல்ல – டிஜிபி தகவல்!

மங்களூரு (20 நவ 2022) மங்களூரு ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி என்ற பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்றில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்து எரிந்த நிலையில் குக்கரும் பேட்டரிகளும் கைப்பற்றப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை இது பயங்கரவாத தாக்குதலோ என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று காலை கர்நாடக மாநில டிஜிபி இதை தீவிரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்மப் பொருள் வெடித்தது விபத்து அல்ல, பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது. மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் இந்த ஆட்டோ துர்கா பரமேஸ்வரி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதில் பயணித்த நபரிடம் பிரேம் ராஜ் என்ற பெயரில் அடையாள அட்டை இருந்துள்ளது. இருப்பினும் இந்த அடையாள அட்டை உண்மை தானா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றன. ஆட்டோவில் பயணித்தவருக்கு 50 சதவீத காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பயங்கரவாத அமைப்புகளின் நிதி திரட்டலை தடுக்க புதிய திட்டம் – மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

சிகிச்சையில் உள்ள ஓட்டுநர் மற்றும் பயணி இருவராலும் தற்போது பேச முடியவில்லை. எனவே, அவர்கள் தேறிய பின்னர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற காவல்துறை திட்டமிட்டுள்ளது.

து மங்களூருவில் ஆட்டோ வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...