வாக்காளர் பெயர் பட்டியலிலிருந்து சிறுபான்மையினர் பெயர்கள் நீக்கம்!

பெங்களூரு (22 பிப் 2023): கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற மத சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறுபான்மை வாக்காளர்களை நீக்குவது எதிர் வரும் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைக்க ஒரு உத்தி என்று சிறுபான்மை தலைவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து, பெங்களூரு பேராயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம், பிப்ரவரி, 15ல் மனு அளித்தனர். அதில் பெங்களூரு சிவாஜிநகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து, 9,195 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட வாக்காளர்களில் குறைந்தது 8,000 பேர் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

‘இதுபோன்ற முறைகேடுகள் தடுக்கப்படாமல் தொடர்ந்தால், தேர்தல் செயல்பாட்டில் மக்களின் நம்பிக்கை அழிந்துவிடும்” என்று பெங்களூரு உயர்மறைமாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜே.ஏ.காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...