வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மேலும் 29 விமானங்கள்: மத்திய அரசு தகவல்!

Share this News:

புதுடெல்லி(24 ஜூன் 2020): வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மேலும் 29 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளி நாடுகளிலிருந்து இந்தியா வர இயலாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு விமானங்களை இயக்கி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 26 ஆயிரம் தமிழர்கள் 50 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.


Share this News: