ஒரே நாளில் 103 பேர் பலி – கொரோனாவால் திக்குமுக்காடும் மகாராஷ்டிரா!

மும்பை (02 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகராஷ்டிரா. அங்கு இன்று ஒரே நாளில் மட்டும் 103 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.

நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,600-ஐ கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 96,000-ஐ கடந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,300 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 2465-ஆக அதிகரித்துள்ளது.

ஹாட் நியூஸ்: