மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா?

RSS
Share this News:

போபால் (25 ஜூலை 2020):தில்லியில் உள்ள நிஜாமுத்தின் மர்கஸ் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அந்த விஷயத்தை பாஜக ஊதி பெரிதாக்கியது. பாஜக வைச் சேர்ந்த பாப்தியா என்பவர் தப்லீக் ஜமாஅத்தினரை ‘அறிவற்ற பன்றிகள்’ என்ற தகாத வார்த்தைகள் மூலம் கேலிப்படுத்தினார்.

தற்போது மத்திய பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி ஜியா உல் ஹக் என்ற மாணவர் பாப்தியா பயன்படுத்திய அதே ‘பன்றிகள்’ என்ற வார்த்தையை ஆர்.எஸ்.எஸ்.-காரர்களுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார். இதனால் ஜியாவுல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதைச் சேர்ந்த ஜியா உல் ஹக் ஜபல்பூர் மாவட்டத்தின் மன்சூராபாத் கோஹல்பூரில் வசித்து வருகிறாய். அவர் டீ. Phயசஅ இறுதி வருடம் படிக்கிறார். இவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 295 (அ) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

கைதுக்கான காரணம் இவர் தனது முகநூலில் ஆர்.எஸ்.எஸ்.-காரர்களை பன்றிகள் என்று அழைத்திருந்ததுதான்.

ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த பாப்தியா போகத் என்பவர் ஏப்ரல் 2 அன்று (கொரனா வைரஸை) வெளவால்கள் உங்கள் (சீனா) நாட்டில் பரப்பியிருக்கலாம். ஆனால் எங்கள் நாட்டில் அறிவற்ற பன்றிகளால் (தப்லீகைச் சேர்ந்தவர்கள்) பரவுகிறது.நிஜாமுத்தீன் மடையர்கள் என்று ட்வீட் செய்திருந்தார். தற்போது அதை நீக்கி விட்டார்.

தன்னை ஒரு ஆர்.எஸ்.எஸ் தொழிலாளி என்று வர்ணித்த இந்து தர்ம் சேனாவின் மாநில துணைத் தலைவர் நீரஜ் ராஜ்புத்தின் புகாரின் அடிப்படையில், ஒரு குழுவின் மத நம்பிக்கைகளை அவமதித்ததற்காக ஜபல்பூர் போலீசார் ஜியா-உல்-ஹக் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கு எதிராக ஹக் ‘அநாகரீகமான’, ‘வெட்கக்கேடான’ மற்றும் ‘சகிக்கமுடியாத’ அறிக்கைகளை வெளியிட்டதாக எஃப்.ஐ.ஆரில் புகார் அளித்தார். ஒரு ஒரு ‘தேசியவாத அமைப்புக்கு’ எதிராக ‘முஸ்லீம் இளைஞர்களின்’ இத்தகைய அறிக்கைகள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடும். ‘ஆர்எஸ்எஸ் ஒரு தேசபக்தி மற்றும் சமூக பணி அமைப்பு, இந்த நாட்டில் கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அத்தகைய ஒரு அமைப்பைப் பற்றி முஸ்லீம் மனிதனின் அநாகரீகமான குறிப்பு எனது சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அந்த மனிதர் கூறிய தவறான குறிப்பு தேசியவாத மற்றும் சமூக சேவையின உணர்வுகளை புண்படுத்தியுள்ளது’ என்று புகார் அளித்தவர் எஃப்.ஐ.ஆரில் கூறியிருந்hர். ‘முஸ்லீம் இளைஞர்களுக்கு’ எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவரைக் கைது செய்யவும் அவர் காவல்துறையை எச்சரித்தார், அது தோல்வியுற்றால், ‘கோபமான எதிர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்யப்படும்’ என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக, ஜியா-உல்-ஹக்கின் வழக்கறிஞர் விகாஷ் ரத்தூர் ஜூலை 21 அன்று ஜபல்பூர் நீதித்துறை முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தபோது, குற்றம் தீவிரமானது என்று கூறி ஜாமீன் மறுத்த நீதிமன்றம் அவரை ஜூலை 24 வரை போலீஸ் காவலுக்கு அனுப்பியது.


Share this News:

Leave a Reply