ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல – நீதிமன்றம் பகீர் தீர்ப்பு!

Share this News:

மும்பை (25 ஜன 2021): ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்ற வழக்கில் சேராது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது   நபர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை  மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ளார்.

இது தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது.

குற்றவாளியை போஸ்கோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தரப்பில் விவாதிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி புஷ்பா கனேடிவாலா போஸ்கோ சட்டத்தின்கீழ், குற்றவாளி பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஏற்க முடியாது என்று  உத்தரவிட்டார்.


Share this News:

Leave a Reply