தாடி வளர்த்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்!

Share this News:

லக்னோ (23 அக் 2020): உத்திர பிரதேசத்தில் தாடி வளர்த்ததற்காக முஸ்லிம் போலீஸ் அதிகாரி இந்திஸார் அலி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆடைக் குறியீட்டை மீறியதாகவும், தனது மேலதிகாரிகளின் அனுமதியின்றி தாடியை வளர்த்ததாகவும் ஒரு இந்திஸார் அளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராம்லா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரான இவர்,, கடந்த ஒரு வருடமாக தாடியை வளர்ப்பதற்கான அனுமதி கோரியிருந்தார் ஆனால் அதற்கான எந்த அனுமதியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே அவர் தாடி வளர்த்தபோதும் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு தாடியை நீக்கியுள்ளார். ஆனால் தற்போது அவர் விதியை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இருப்பினும், தாடி வளர்ப்பதற்கான அனுமதிக்காக கடந்த நவம்பரில் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்ததாகவும், இதுகுறித்து எந்த பரிசீலனையும் செய்யாமல் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் இந்திசார் அலி தெரிவித்துள்ளார்

மேலும் நான் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. அன்றிலிருந்து தாடியை வளர்த்து வருகிறேன். என் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனால் இப்போது என் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை விசித்திரமாக உள்ளது என்று அலி தெரிவித்தார்.

அலி 1994 இல் ஒரு கான்ஸ்டபிள் ஆக பணியில் சேர்ந்தார்.. மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு, விடுப்புக்கு விண்ணப்பிக்க எஸ்.பி. பிரதாப் கோபேந்திர யாதவை அணுகியபோது, ​​தாடி வளர்ப்பதற்கும் அனுமதி கோரியுள்ளார். அதற்காக அவர் அனுமதி கோரி விண்ணப்பித்தார். ஆனால் அதற்கான அனுமதி கொடுக்காமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக இந்திஸார் அலி தெரிவித்துள்ளார்.

போலீஸ் விதிகளின்படி தாடி வளர்க்க சீக்கியர்களுக்கு ஏற்கனவே அனுமதி உள்ள நிலையில் மற்றவர்கள் அனுமதி பெற்ற பின்னரே தாடி வளர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது


Share this News:

Leave a Reply