கோவில் கட்டுவதற்கு ரூ. 2.5 கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய முஸ்லிம்கள்!

Share this News:

பாட்னா (22 மார்ச் 2022): பீகாரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பம், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் மிகப்பெரிய இந்து கோவிலான விராட் ராமாயண மந்திர் கட்டுவதற்காக 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளது.

திங்களன்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்னாவை தளமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால், “குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த தொழிலதிபர் இஷ்தியாக் அகமது கான்,குடும்பத்தினர் எங்களுக்கு கோவில் கட்ட . நிலத்தை நன்கொடையாக வழங்கினர்.

சமீபத்தில் கேஷாரியா துணைப்பிரிவின் (கிழக்கு சன்பரான்) பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தை நன்கொடையாக அளித்தது தொடர்பான அனைத்து சம்பிரதாயங்களையும் கான் முடித்தார்.” என்றார்

மேலும் கான் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த நன்கொடை சமூக நல்லிணக்கம் மற்றும் இரு சமூகங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஆச்சார்யா கூறினார். முஸ்லிம்களின் உதவி இல்லாவிட்டால் இந்த கனவுத் திட்டத்தை நனவாக்குவது கடினமாக இருந்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply