இறந்த இந்துவின் உடலை வாங்க யாருமில்லை – இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம்கள்!

Share this News:

ஜெய்ப்பூர் (13 ஏப் 2020): இறந்த இந்துவின் உடலை வாங்க யாருமில்லாத நிலையில் அவரது அண்டை வீட்டு முஸ்லிம்கள் இந்து முறைப்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தனர்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் பஜ்ரங் நகர் பட்டா பாஸ்தி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரா. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரா திங்கள்கிழமை காலமானார். ஆனால் அவரது குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லாததால் அவரது உடலை தகனம் செய்வது பெரும் சவாலாக மாறியது. அத்துடன் ஊரடங்கு காரணமாக அவரது உறவினர்கள் யாரும் இறுதி சடங்குக்கு ஜெய்ப்பூருக்கு செல்ல முடியவில்லை. அக்கம் பக்கத்திலும் இந்துக்கள் யாரும் இல்லை.

இந்த சூழ்நிலையில் அவரது வீட்டின் அருகே வசிக்கும் முஸ்லிம்கள் இறுதி சடங்குகளை செய்ய முன்வந்தனர். அவர்கள் அவருடைய உடலை இந்து மத விதிமுறைகளின்படி தயார் செய்து தகனம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு சுமந்து சென்று இந்து மத வழக்கப்படி சடங்குகளை செய்தனர். பின்னர் தகனம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் எது நடந்தாலும் அதற்கு முஸ்லிம்களை குற்றவாளியாக்கி அழகு பார்க்கும் ஆட்சியாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு மத்தியில் இதுபோன்ற மனித நேய செயல்களுக்கு மட்டும் முடிவில்லை.


Share this News:

Leave a Reply