முஸ்லிம்களிடம் எவரும் காய்கறி வாங்குவதில்லை – முஸ்லிம் வியாபாரிகள் புகார்!

Share this News:

லக்னோ (15 ஏப் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக முஸ்லிம் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று இந்துக்கள் அறிவித்துள்ளதாக முஸ்லிம் வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் மொஹோபா பகுதியில் இரு முஸ்லிம் வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், “எங்கள் பகுதியில் சிலர் தப்லீக் ஜமாத் மக்கள் இருப்பதால், எங்களிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று அப்பகுதி இந்துக்கள் அறிவித்துள்ளதால் எங்களுக்கு காய்கறி வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று புகார் அளித்துள்ளனர்.

மேலும் சிலர் அந்த முஸ்லிம்களிடம் காய்கறி வாங்கிச் சென்றதாகவும் பிறகு நாங்கள் முஸ்லிம்கள் என்று அறிந்ததும் காய்கறியை திருப்பித் தந்ததாகவும் அவர்கள் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

டெல்லி நிஜாமுத்தீனில் கூடிய தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே நாடெங்கும் கொரோனா பரவுவதற்கு காரணம் என்று அரசும், ஊடகங்களும் பொய்யான தகவல் பரப்பியதன் விளைவால் நாடெங்கும் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply