உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் துணை முதல்வர் – உவைசி!

Share this News:

லக்னோ (30 ஜன 2022): உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சியை தாக்கி பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, யார் பெரிய இந்து கட்சி என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது என்று கூறினார்.

ANI இடம் பேசிய ஒவைசி, “யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே யார் பெரிய இந்து என்பதில் சண்டை நடக்கிறது. இருவரும் பெரிய இந்துவாக மாறுவதற்கு போட்டி போடுகிறார்கள். ஒருவர் ஒரு கோயிலைப் பற்றி பேசினால், மற்றொருவர் மற்றொரு கோயிலைப் பற்றி பேசுகிறார்” என்றார்.

மேலும் AIMIM கூட்டணி பற்றி கேட்டதற்கு, “பாகிதாரி சங்கல்ப் மோர்ச்சாவின் கீழ் உள்ள உள்ள கூட்டணியில் எங்கள் கட்சி இணைந்துள்ளது. அனைத்து கட்சிகளுக்கும் பாபு சிங் குஷ்வாஹா ஒருங்கிணைப்பாளராக இருப்பார். நாங்கள் வெற்றி பெற்றால், முதல் 2.5 ஆண்டுகள் அவர் முதல்வராகவும், மீதமுள்ள 2.5 ஆண்டுகள் தலித் முதல்வராகவும் இருப்பார்” என்று தெரிவித்தார்.

பகிதாரி சங்கல்ப் மோர்ச்சா ஆட்சிக்கு வந்தால் 3 துணை முதல்வர்கள் இருப்பார்கள் என்று ஒவைசி கூறினார். மூன்று துணை முதலமைச்சர்களில் ஒருவர் முஸ்லிம் சமூகத்தையும் மற்றையவர் பின்தங்கிய சமூகத்தையும் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

மொத்தமுள்ள 403 இடங்களில் AIMIM கட்சி 100 இடங்களில் போட்டியிடும் என அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 அன்று நடைபெறும்.


Share this News:

Leave a Reply