உத்திர பிரதேசத்தில் 8 சதவீத முஸ்லீம் வாக்குகளை பெற்ற பாஜக!

லக்னோ (13 மார்ச் 2022): நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது எட்டு சதவீத முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

முஸ்லிம்கள் எதிராக வாக்களிக்கிறார்கள் என்ற பொதுவான கருத்து இருந்தபோதிலும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

CSDS-லோக்நிதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 20 சதவீத முஸ்லிம் வாக்குகளில் சமாஜ்வாடி கட்சி சுமார் 79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும், குறைந்தது 8 சதவீத வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது எனவும், இது 2017ஆம் ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகமாகும் எனவும் CSDS-லோக்நிதி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களால் இந்துக்களுக்கு நிகரான பலன்களை முஸ்லிம்களும் பெற்றிருப்பதுதான் முஸ்லிம் வாக்குகள் பாஜக பக்கம் மாறுவதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேவேளை “தலித்துகளை விட முஸ்லீம் சமூகத்தின் நிலை மோசமாக உள்ளது” என்று சச்சார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...