தங்கக் கடத்தல் வழக்கில் அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை!

Share this News:

திருவனந்தபுரம் (18 செப் 2020): கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானதால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதாவது, அரசின் நெறிமுறை விதிகளை மீறி துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலமாக மத சார்புள்ள நூல்களை அனுப்பியது தொடர்பாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இன்று அவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.

இதனை தொடர்ந்து அமைச்சர் ஜலீல் பதவி விலக கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தனித்தனியாக போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply