யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிதிஷ்குமார் காட்டம்!

Share this News:

பாட்னா (05 நவ 2020): பிகாரில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிதிஷ் பேசிய பேச்சு , நிதிஷ் குமார் பாஜக கூட்டணி இடையே பிளவை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கடுமையாக சாடி பேசினார். பிகாரில் ஊடுருவியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று யோகி பேசிய பேச்சு, நிதிஷ்குமாரை ஆவேசப்பட்ட வைத்துள்ளது.

கதிஹாரில் நடந்த பேரணியில் பேசிய யோகி ஆதித்யநாத், அதே நேரத்தில், தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் ஊடுருவும் நபர்கள் வெளியேற்றப்படுவார்கள். தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு இடையூறு விளைவிக்கும் எவரையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், ”என்று யோகி கூறினார்.

இந்நிலையில் பிகார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார் யோகியின் கருத்து குறித்து பேசுகையில், ‘இந்த வெறுப்பு பிரச்சாரத்தை செய்பவர்கள் முட்டாள்கள், எல்லோரும் இந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். “எல்லோரும் இந்தியர்கள் ” என்று நிதிஷ் குமார் கூறினார்.

எங்கள் குறிக்கோள் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம். அப்படித்தான் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். வெறுப்பை பரப்புவோரின் குறிக்கோள் பிளவுகளை உருவாக்குவதாகும். அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று நிதீஷ்குமார் கூறினார்

நிதீஷ்குமாரின் பேச்சு பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் உள்ள பிளவுகளை அம்பலப்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply