உருது மொழியில் பெயர் பலகைக்கு எதிர்ப்பு? – உத்தரவிட்ட முஸ்லிம் அதிகாரி நீக்கம்!

Share this News:

லக்னோ (15 செப் 2022): உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் உருது மொழியில் பெயர் பலகைகள் பொருத்த உத்தரவிட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர். தபசும் கான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேச சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி பிறப்பித்த உத்தரவில், அரசு மருத்துவமனைகளில் சைன்போர்டுகள் மற்றும் பெயர்ப் பலகைகள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் உருது மொழியில் எழுதப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு சிஎம்ஓக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாக உருது இருந்தாலும், மருத்துவமனைகளில் உருது மொழியில் பெயர் பலகை இல்லை என்பதால் தபசும் கான் உருது மொழியில் பெயர் பலகை வைக்க உத்தரவிட்டார். ஆனால் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் பெயர் பலகை வைத்ததால் தபசும் கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply