காஷ்மீர் தேர்தலின் மூலம் ஜனநாயகம் வென்றது: உமர் அப்துல்லா!

Share this News:

ஸ்ரீநகர் (24 டிச 2020): காஷ்மீர் 288 மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தல் முடிவுகள் உண்மையான ஜனநாயக வெற்றியை காட்டுகிறது என்று பாஜகவுக்கு உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 288 மாவட்ட கவுன்சில்களுக்கான (டி.டி.சி) முதல் தேர்தலில் 112 இடங்களை ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி (பிஏஜிடி) வென்றுள்ளது. பாஜக 75 இடங்களை மட்டுமே வென்றது.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் (என்.சி) துணைத் தலைவர் உமர் அப்துல்லா, “ஜனநாயகம் வென்றது என்று நீங்கள் உண்மையிலேயே சொன்னால், நீங்கள் மக்களின் குரலைக் கேட்க வேண்டும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்கள் முடிவை எங்களுக்கு அளித்த பெரும்பான்மையால் கூறியிருக்கிறார்கள் ” என்று கூறியுள்ளார்


Share this News:

Leave a Reply