இந்தியாவில் 1270 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (31 டிச 2021): இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,270 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமிக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 450 பேரும், டெல்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. தமிழகத்தில் 46 பேர் ஒமிக்ரான் பாதிப்புடன் உள்ளனர்.

கர்நாடகாவில் 34 பேரும், ஆந்திராவில் 16 பேரும், அரியானாவில் 12 பேரும் ஒமிக்ரான் தாக்குதலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒமிக்ரான் பாதித்த 1,270 பேரில் 374 பேர் குணமடைந்து விட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் சீரான உடல்நலத்துடன் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...