எஸ்டிபிஐ தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒரு ஆர் எஸ் எஸ் தலைவர் கைது!

ஆலப்புழா (27 டிச 2021): எஸ்டிபிஐ தலைவர் ஷான் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைவிடத்தை அமைத்து கொடுத்ததற்காக ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த மேலும் ஒரு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலப்புரம் வட்டத்தில் உள்ள ஆலுவா என்ற ஊரைச் சேர்ந்த அனீஷ் என்பவரை, கொலையாளிகளுக்கு புகழிடம் கொடுத்ததற்காக காவல் துறையினர் கைது செய்தனர்.

ஷான் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆலுவா ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பதுங்கியிருந்து தப்பிச் செல்ல உதவியவர் அனீஷ். இதன் மூலம் ஷான் வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

ஷான் கொலை விசாரணைக் குழுவினர் நேற்று முன்தினம் ஆலுவா அலுவலகத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளிகள் ஆலுவா அலுவலகத்தில் பதுங்கி இருந்ததும், இந்த சம்பவத்தில் அனீஷுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

SDPI தலைவர் ஷான் கொலை, ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்குத் தெரிந்தே திட்டமிட்ட பழிவாங்கும் படுகொலை என போலீஸ் ரிமாண்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

ஷானை கொலை செய்வதற்காக ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ரகசியக் கூட்டங்கள் நடந்தன; இரண்டு குழுக்களாக வந்து ஷான் கொல்லப்பட்டார் என விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் கொலையாளிகள் திருச்சூருக்குத் தப்பிச் செல்ல உதவியவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....