கடுமையாக உழைத்தோம் – அசாதுத்தீன் ஒவைசி!

Share this News:

புதுடெல்லி (11 மார்ச் 2022): உத்தரப்பிரதேசத் தேர்தலில் கடுமையாக உழைத்தும் மக்கள் மாற்றி தீர்ப்பளித்துவிட்டனர் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக நினைத்துப் பார்க்காத வெற்றியை பெற்றது.

காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவின் வெற்றி குறித்து, அசாதுதீன் ஒவைசி கூறுகையில், உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கடுமையாக உழைத்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. மக்கள் பாஜகவிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அவர்களின் முடிவிற்கு மதிப்பளிக்கிறேன்.

பகுஜன் சமாஜ் கட்சி கலைக்கப்பட்டால் அது ஜனநாயகத்திற்கு சோகமான நாளாக இருக்கும். இந்திய ஜனநாயகத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. கட்சி வலுவடையும் என நம்புகிறோம். இந்தத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், எங்களுக்காக உழைத்த கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.


Share this News:

Leave a Reply