குழந்தைகள் கண்முன்னே விஷம் குடித்த பெற்றோர்- மத்திய பிரதேசத்தில் பரிதாபம்!

Share this News:

போபால் (16 ஜூலை 2020): குழந்தைகளின் கண் முனபாகவே பூச்சிக் கொல்லி மருந்துகளை பெற்றோர் உட்கொண்ட பரிதாப சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள குணா என்ற இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ராம்குமார் அஹிர்வார் என்ற தலித் விவசாயி அரசு இடத்தில் தங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த இடத்தில் ஒரு கல்லூரி கட்ட குணா நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதற்காக அந்த விவசாயியை காலி செய்ய சொல்லி வந்துள்ளனர். இதற்கு அவர் மறுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 14.7.2020 அன்று தாசில்தார் நிர்மல் ரதோர் தலைமையில் அவரை வெளியேற்றிட சென்றுள்ளனர். அவர்கள் வெளியேற மறுக்கவே அந்த தம்பதிக்கு சொந்தமான விவசாய பயிர்களை காவல்துறையினர் அராஜகமாக அழித்துள்ளனர். இதனைக் கண்ட இந்த தம்பதியினர் பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளனர்.

உடனடியாக இந்த தம்பதியினரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அஹிர்வாரின் மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தம்பதிகளுக்கு எதிராக தற்கொலை முயற்சி (இபிகோ 309), அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் (இபிகோ 353) போன்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

உண்மையில் தப்பு பர்தி என்ற குற்றவாளிதான் இந்த இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து பின்னர் அஹிர்வார் குடும்பத்திற்கு வாடகைக்கு வழங்கியுள்ளார். காவல்துறையினர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள ஐ.ஜி. ராஜபாபு சிங்- கோ, ரதோரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தவே காவல்துறையினர் முயன்றதாக கூறுகிறார். காவல்துறையினரை அனுப்பி இது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில், மத்தியபிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் காட்டாட்சி நடத்துவதாக
குற்றஞ்சாட்டியுள்ளார், முன்னாள் முதல்வர் கமல்நாத்.


Share this News:

Leave a Reply