கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!

Share this News:

ஐதராபாத் (16 ஜன 2021): கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த அந்நிறுவன படிவத்தில் கூறப்பட்டிருப்பதாவது :

தடுப்பூசி பெறுநர்களுக்கு ஏதேனும் பாதகமான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்படும்.

மேலும், பக்கவிளைவுகள் தடுப்பூசிக்குத் தொடர்புடையது என நிரூபிக்கப்பட்டால், இழப்பீடும் வழங்கப்படும்.

மேற்கண்டவாறு படிவத்தில் கூறப்பட்டுள்ளது.

கட்டம் 1 மற்றும் 2 மருத்துவ பரிசோதனைகளில், கோவாக்ஸின் COVID-19 க்கு எதிராக உடல் எதிர்ப்பை உருவாக்கும் திறனை நிரூபித்துள்ளது. 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் தற்போதுதான் நடந்து வருகிறது.

தடுப்பூசி பெறும்போது COVID-19 தொடர்பான பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமானதாகும் என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


Share this News:

Leave a Reply