பாப்புலர் ஃப்ரெண்ட் நிர்வாகி படுகொலை – ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டு!

கோழிக்கோடு (15 ஏப் 2022): கேரளாவில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா தலைவர் சுபைர் கொடூராமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் என பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சிபி முகமது பஷீர் கூறுகையில். எலப்புள்ளி பாரா வட்டாரத் தலைவர் சுபைர், வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து தந்தையுடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது கார் மோதி கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

இந்த கொலையை நிகழ்த்தியது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் என பஷீர் தெரிவித்துள்ளார்.

இந்த படுகொலையை RSS மிகத் திட்டமிட்ட முறையில் துல்லியமான சதி மூலம் நடத்தியது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உயர்மட்ட சதியை வெளியே கொண்டு வர வேண்டும். ஆர்.எஸ்.எஸ் நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறது. பாலக்காடு மாவட்டம் உட்பட கேரளா முழுவதும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையில் கொலைகள் நடந்துள்ளன.

கடந்த சில நாட்களாக ராம நவமி கொண்டாட்டம் என்ற போர்வையில் நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். இதைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சூழலில் பாலக்காடு மாவட்டத்தில் சுபைர் கொல்லப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என சிபி முகமது பஷீர் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...