ஹலால் பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

Share this News:

புதுடெல்லி (22 ஏப் 2022): நாடு முழுவதும் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் ஹலால் சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர் வழக்கறிஞர் விபோர் ஆனந்த், நாட்டில் 85 சதவீதம்பேர் ஹலால் பொருட்களை விரும்பவில்லை எனக்கூறி மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த மனுவில் “இந்திய அரசியலமைப்பின் 14, 21 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளின்படி இதனை செயல்படுத்த வேண்டும். . நாட்டின் 15% மக்களின் நலனுக்காக, மீதமுள்ள 85% மக்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ஹலால் பொருட்களை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவில், KFC, Nestle, Britannia போன்ற நிறுவனங்களுக்கும், இந்தியாவில் செயல்படும் பல உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் இருந்து அனைத்து ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவுகள் மீதான ஹலால் சான்றுகளை திரும்பப்பெற வேண்டும்.” என்று அந்த மனுவில் கூறப்படுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி. ஹலால் உணவுகளுக்கு தடைக்கான கோரிக்கையை முதலில் எழுப்பினார். மேலும் ஹலால் இறைச்சி விற்பனையானது பொருளாதார ஜிஹாத்” என்றும், முஸ்லிம்கள் “இறைச்சி சந்தையில் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply