பாங்கு நேரத்தில் கோவில்களில் இந்து பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டம்!

Share this News:

பெங்களூரு (04 ஏப் 2022): கர்நாடகாவில் தொழுகைக்கு அழைக்கும் (பாங்கு) நேரத்தில் இந்து பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி விவகாரம் என கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், புனித ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ள சூழலில் மசூதிகளில் பாங்கு அழைக்கும் நேரங்களில் “ஓம் நம சிவா”, “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்கள் மற்றும் பிற பக்தி பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

பெங்களூரில் உள்ள ஆஞ்சநேயா கோவிலில் பாங்கு அழைக்கும் 5 மணிக்கு இந்து பிரச்சாரம் தொடங்கும் என்று இந்து ஆர்வலர் பரத் ஷெட்டி திங்களன்று கூறியுள்ளார். இந்த பிரச்சாரம்மாநிலம் முழுவதும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, என்றும் அவர் தெரிவித்தார்.

ரம்ஜான் தொடங்கியுள்ளதாலும், இது முக்கியமான பிரச்னை என்பதாலும், காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், தாசில்தார் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஸ்ரீராம் சேனா தெரிவித்துள்ளது.

“கடைசி முயற்சியாக மாவட்ட ஆணையர்களிடம் புகார் அளிப்போம். சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு முஸ்லிம் சமூகத்தை அரசு கேட்டுக் கொள்ள வேண்டும். அவர்களின் பிரார்த்தனைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம், இதனால் லட்சக்கணக்கான மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்” என்று ஸ்ரீராம் சேனா நிறுவனர் பிரமோத் முத்தாலிக் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply