மதுராவில் மற்றொரு மசூதியை அகற்றக்கோரி நீதிமன்றத்தில் மனு!

Share this News:

மதுரா (15 செப் 2022): உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மொகலாயர் கால மீனா மசூதியை அகற்றக் கோரி மதுரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அகில பாரத இந்து மகாசபாவின் (ABHM) தேசிய பொருளாளர் தினேஷ் ஷர்மா, மதுரா சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) மதுரா, ஜோதி சிங் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி வளாகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தாக்கூர் கேசவ் தேவ் ஜி கோவிலின் ஒரு பகுதியில் மசூதி கட்டப்பட்டதாக கூறியுள்ளார்.

மற்றொரு முக்கியமான மசூதியான ஷாஹி மஸ்ஜித் இத்காவிற்கு எதிராக பல்வேறு மதுரா நீதிமன்றங்களில் ஏற்கனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இந்நிலையில் புதிய மனுவில், மினா மசூதிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்படுள்ளது.

இந்த வழக்கை அக்டோபர் 26-ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தீபக் சர்மா தெரிவித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமியை ஒட்டியுள்ள ஷாஹி மஸ்ஜித் இத்காவை அகற்றக்கோரி சர்மா ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார்..


Share this News:

Leave a Reply