நான் உங்கள் குடும்ப உறுப்பினர் – போரா முஸ்லிம்களிடம் உரையாடிய பிரதமர் மோடி!

மும்பை (10 பிப் 2023): ஷியா முஸ்லிம்களின் தாவூதி போரா பிரிவினரின் புதிய அகாடமியை பிரதமர் திறந்து வைத்து அவர்களை பாராட்டினார். அப்போது உரையாற்றிய மோடி, நான் இங்கு பிரதமராக வரவில்லை, உங்கள் குடும்ப உறுப்பினராக வந்தேன் என்று கூறினார்.

மும்பை மரோலில் அல் ஜாமியத்துஸ் சைஃபி (சைஃபி அகாடமி)யை மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய மோடி “நீங்கள் என்னை மரியாதைக்குரிய பிரதமர் என்று அழைக்கிறீர்கள். நான் உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம். நான் இங்கு பிரதமராகவோ, முதலமைச்சராகவோ வரவில்லை.

நான்கு தலைமுறையாக இந்தக் குடும்பத்துடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான்கு தலைமுறைகளும் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். குடும்ப உறுப்பினராக இங்கு வர வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று மோடி கூறினார்.

மேலும் “நான் எங்கு சென்றாலும் எனது போரா சகோதர சகோதரிகள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அவர்கள் உலகில் எங்கிருந்தாலும், இந்தியா மீதான அவர்களின் அன்பையும் அக்கறையையும் எப்போதும் காணலாம்” என்று மோடி கூறினார்.

சைஃபி அகாடமி தாவூதி போரா பிரிவின் முதன்மையான கல்வி நிறுவனமாகும். சைஃபி அகாடமி போரா சமூகத்தின் கற்றல் பாரம்பரியம் மற்றும் எழுத்தறிவு கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தாவூதி போரா பிரிவுடன் மோடிக்கு நல்ல தொடர்பு உள்ளது.

ஷியா பிரிவின் துணைப்பிரிவான தாவூதி போராக்கள், இந்திய முஸ்லீம்களிடம் இருந்து வெளிப்படையாக பிஜேபிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் போரா சமூகத்தினரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, அவர்களையும் பாராட்டியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...