மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக எம்பி பத்ருத்தீன் அஜ்மல் மீது எதிர்கட்சிகள் புகார்!

கவுஹாத்தி (05 டிச 2020;): மத ஒற்றுமையை சீர்குலைப்பதாகக் கூறி அஸ்ஸாம் எம்பி பத்ருத்தீன் அஜ்மல் மீது எதிர் கட்சிகள் போலீசில் புகார் அளித்துள்ளன.

இந்துக்களும் முஸ்லிம்கள் போல் தங்கள் பிள்ளைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்” என்று அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ரூதீன் அஜ்மல் யோசனை தெரிவித்துள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்தியாவில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவை. இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து வருகிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பத்ருதீன் அஜ்மல், “முஸ்லிம் ஆண்கள் 20 முதல் 22 வயதில் திருமணம் செய்துவிடுகின்றனர். முஸ்லிம் பெண்கள் 18 வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் இந்துக்கள் திருமணத்துக்கு முன்னரே இரண்டு, மூன்று பெண்களுடன் வாழ்கின்றனர். குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. சுகங்களைப் பெற்றுக் கொண்டு பணத்தை சேமிக்கின்றனர். 40 வயதுக்கு மேல்தான் அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.

40 வயதுக்கு மேல் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது எளிதாகும். நல்ல வளமான மண்ணில் விதைக்கப்படும் விதைகளே பலன் தரும் பயிறாகும். அதனால் இந்துக்களும் முஸ்லிம்களின் நடைமுறையைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்களாக இருந்தால் 20 முதல் 22 வயதிலும் பெண்களாக இருந்தால் 18 முதல் 20 வயதிலும் திருமணம் செய்துவைக்க வேண்டும். அப்புறம் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று பாருங்கள்” என்று கூறினார்.

பத்ருத்தீன் அஜ்மல் கருத்துக்கு பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் சார்பில் பத்ருத்தீன் அஜ்மல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...