உத்திர பிரதேசத்தில் நடந்தது என்ன? – மழுப்பும் காவல்துறை!

356

மீரட் (13 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்து போலீசார் சரியான தகவல் சொல்லவில்லை என கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மீரட் நகரில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, இதுவரை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலேயே பலர் கொல்லப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்டத்தை கலைப்பதற்காக காவலர்கள் வானத்தை நோக்கி மட்டுமே துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பலியானவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது குறித்து போலீஸ் தரப்பு கூற மறுத்துவிட்டது. மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து இதுவரை ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை என்று பாதிக்கப் பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.