வங்கி மற்றும் தபால் நிலையங்களில் பணம் எடுப்போருக்கு வருமான வரித்துறையின் திடீர் அறிவிப்பு!

236

மும்பை (14 ஜூலை 2020): வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இருந்து ரூ. 20 லட்சத்திற்கும் மேல் எடுக்கப்படும் பணத்திற்கு கூடுதல் டிடிஎஸ் வரி செலுத்த வேண்டும் என்றும் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும் வருமான வரிந்த்துறை அறிவித்துள்ளது,.

இதன்படி வருமான வரி செலுத்தாதவர்கள், தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் வரை மட்டுமே எந்தவித வரி பிடித்தமும் இல்லாமல் பெற முடியும். ரூ. 20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால் 2%மும் ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 5%மும் வரி பிடித்தம் செய்யப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  முஸ்லிம்களால்தான் உயிருடன் இருக்கிறேன் - பெங்களூரு கலவர சூத்திரதாரி நவீனின் தாய் நெகிழ்ச்சி!

அதே வேளையில் வருமான வரி செலுத்துபவர்கள், தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால் எந்த வித வரி பிடித்தமும் செய்யப்படாது. ஒரு கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 2%வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய நடைமுறை மூலம் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, அவர்களது பான் நம்பர் பதிவு செய்யப்படும். அப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகைக்கு மேல் பணம் எடுத்தால், தானாகவே வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.