அதிகாலை பாங்கு அழைப்பிற்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் எதிர்ப்பு!

Share this News:

புதுடெல்லி (12 நவ 2021): மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் பாஜக எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர் அதிகாலையில் பாங்கு அழைப்பிற்காக ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “காலை நேரத்தில், மைக் மூலம் ஒலி இந்து துறவிகளின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. துறவிகள் காலை 4 மணிக்கு தங்கள் சாதனாவை தொடங்குகிறார்கள். அது பிரம்ம கணம். எங்கள் முதல் ஆரத்திக்கான நேரமும் அதுதான். ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பல இரத்த அழுத்த நோயாளிகளின் உறக்கமும் இதனால் கெடுகிறது” என்று தெரிவித்தார்.

பிரக்யா சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பூஜை மற்றும் வங்கி பற்றி வாதிடுவதற்கான நேரம் இதுவல்ல. ஹமிடியா மருத்துவமனையில் இறந்த பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வக்கில்லாத பிரக்யா சிங் மத அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply