மக்களால் விரட்டியடிக்கப்பட்ட தொகுதியில் பாஜகவினர் வெற்றி பெற்றது எப்படி?

Share this News:

நொய்டா (11 மார்ச் 2022): மக்களால் பாஜகவினர் விரட்டியடிக்கப் பட்ட நிலையில் அதே தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நொய்டா தொகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் நிறுத்தப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் மூத்த அமைச்சர் மகன் என்பதால் இவரது தொகுதியிலும் பரப்புரை வேகம் எடுத்தது.

இச்சூழலில் தான், இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு எதிராக நொய்டா மக்கள் போராட்டம் செய்தனர். நொய்டா தொகுதி பாஜக வேட்பாளர் பங்கஜ் சிங் ஆதரித்து பாஜக எம்.பி மனோஜ் திவாரி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் அவர்களை அங்கிருந்து வாக்கு சேகரிக்க விடாமல் தூரத்தி அடித்தனர்.

இதனனைத் தொடர்ந்து பங்கஜ் சிங்கிற்கு ஆதரவாக மனோஜ் திவாரி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். உடனே அங்கிருந்த மக்கள் மொத்தமாக கூடி பங்கஜ் சிங் மற்றும் மனோஜ் திவாரிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

மேலும் பாஜகவிற்கு எதிராக கடுமையான கோஷங்களையும் எழுப்பினர். பாஜக உள்ளே வர கூடாது என்றும் இங்கே பிரச்சாரம் செய்ய கூடாது என்று கத்தி கூச்சலிட்டனர். மேலும் அதோடு விடாமல், எம்.பி மனோஜ் திவாரிக்கு எதிராக அங்கு கூடியிருந்த மக்கள் செருப்பை தூக்கி காட்டி விரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் நேரம் என்பதால் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மக்கள் எதிர்ப்பு வலுவாக இருப்பதால் கண்டிப்பாக இந்த தொகுதியில் மத்திய அமைச்சரின் மகன் தோல்வியடைவது நிச்சயம் என்று அரசியல் தளத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில்தான் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. உத்தரபிரதேசத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. யாரும் எதிர்பாராத விதமாக, நொய்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் பங்கஜ் சிங் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.இந்திய அரசியல் வரலாற்றில் சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் என்பதும் இவரே.

மக்கள் ஆதரவு இல்லாத தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது எப்படி என்ற கேள்வியும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply