கேள்விக்குறியாகும் முஸ்லிம் மாணவிகளின் கல்வி – பியுசிஎல் கவலை!

Share this News:

பெங்களூரு (10 செப் 2022): கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் மாநில அரசின் நடவடிக்கையாலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாலும் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பான, ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்’ கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பியூசிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசின் உத்தரவும், அதனை வழிமொழிந்துள்ள நீதிமன்ற உத்தரவையும் மேற்கோள் காட்டி, உயர் நீதிமன்ற தீர்ப்பு, பாரபட்சமற்ற கல்வி உரிமை, சமத்துவ உரிமை, கண்ணியம், தனியுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, பாகுபாடு மற்றும் தன்னிச்சையான சுதந்திரம் போன்ற பல உரிமைகளை மீறுவதாக அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

‘கல்லூரிகளில் ஹிஜாபை தடை செய்வதில் காட்டியுள்ள ஆர்வம், அரசியலமைப்பு கடமையை முற்றிலும் புறக்கணிப்பதாகவும், இந்த உத்தரவு பல மாணவர்களை தங்கள் கல்விக்கூடங்களை விட்டு வெளியேற நிர்பந்தித்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த அறிவிப்பை திரும்பப் பெறுமாறு முதல்வர் பசவராஜ் பொம்மையை PUCL கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்கம் ஏன் இத்தகைய ‘திடீர், தன்னிச்சையான மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான’ முடிவை எடுத்தது என்பதை விசாரிக்க நீதித்துறையை அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது.

“சம்பந்தப்பட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் முதல்வர்கள், சி.டி.சி.க்கள் மற்றும் கல்லூரி மேம்பாட்டுக் குழுக்கள் மீது மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சிறுபான்மை ஆணையம் தானாக முன்வந்து புகார்களை பதிவு செய்து, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமைப்பு கோரியுள்ளது.

PUCL ஆய்வின்படி, ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் விளைவாக கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்ட கடினமான நடவடிக்கைகள், மாணவர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல பயப்பட வைக்கின்றன. இந்து மாணவர்கள் வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் மிரட்டல் செய்திகளை அனுப்பும் சம்பவங்களையும் அது கவனித்துள்ளது.

எங்களை தண்டிக்க விரும்புவதாகவும் இதே போன்ற பிற அச்சுறுத்தல்களை அந்த மாணவர்கள் குழு தொடரந்து செய்து வருவதாக முஸ்லிம் மாணவர் கூறியதாக அந்த அறிக்கை கூறுகிறது. சில மாணவர்கள் ஹிஜாப், மற்றும் புர்காவை சுட்டிக்காட்டி கிண்டலடிப்பதாகவும், பல கல்லூரிகள் தங்கள் மாணவர்களைப் பாதுகாப்பதை விட கொடுமைப்படுத்துதலை ஊக்குவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பல கல்லூரிகளின் முதல்வர்கள் இது குறித்து மௌனம் காத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply