குடியுரிமை சட்ட எதிர்ப்பு – அதிரடி காட்டிய பஞ்சாப் அரசு!

Share this News:

சண்டீகர் (17 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபையில் இரண்டு நாள் சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில அமைச்சர் மொஹிந்திரா சிஏஏ க்கு எதிரான இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

மேலும் “சி.ஏ.ஏ. வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடரும்” என்றும் அம்மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply