இதுதான் குஜராத் மாடல் – கொரோனா உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான்: ராகுல் காந்தி!

Share this News:

புதுடெல்லி (16 ஜூன் 2020): நாட்டில் குஜராத் மாநிலத்திலேயே கொரோனா உயிரிழப்புகள் அதிகம் காணப்படுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாஜக குஜராத் மாடலை முன்வைத்தே பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை கைபற்றியது. ஆனால் பல விவகாரங்களில் குஜராத்தின் உண்மை முகம் அம்பலப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான் என்று ராகுல் காந்தி புள்ளி விவரங்களுடன் விவரித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா உயிரிழப்பு என்பது 3.73 சதவீதம்தான் ஆனால், கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் கொரோனா உயிரிழப்பு 6.25 சதவீதமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், “மாநில வாரியாக கொரோனா உயிரிழப்பு விகிதம்: குஜராத் 6.25 சதவீதம், மகராஷ்டிார 3.73 சதவீதம், ராஜஸ்தான் 2.32 சதவீதம், பஞ்சாப் 2.17 சதவீம், புதுச்சேரி 1.98 சதவீதம், ஜார்கண்ட் 0.5 சதவீதம், சத்தீஸ்கர் 0.35 சதவீதம். குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்


Share this News: