ட்விட்டர் மீது ராகுல் காந்தி பாய்ச்சல் – யூடூபில் பரபரப்பு வீடியோ!

Share this News:

புதுடெல்லி (13 ஆக 2021): ட்விட்டர் தனது நடுநிலையை இழந்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறுமியின் பெற்றோருடன் ராகுல் காந்தி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இது டுவிட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ராகுல் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார் .ஆனால் அதனையும் மீறி அவரின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியது.

இந்நிலையில் ராகுல் டுவிட்டரின் ஆபத்தான விளையாட்டு’ என்ற தலைப்பில் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய டுவிட்டர் கணக்கை முடக்கியதன் மூலம் டுவிட்டர் நிறுவனம் எங்களின் அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறேன்.

என்னுடைய டுவிட்டர் கணக்கை முடக்கியது ராகுல் என்னும் தனிமனிதனுக்கான தாக்குதல் என்று எளிதாக கடந்துவிட முடியாது. எனக்கு டுவிட்டரில் 2 கோடி பாலோவர்ஸ் (பின்தொடர்பவர்கள்) உள்ளனர். அவர்களின் கருத்துக் கூறும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் நியாயமற்றது. டுவிட்டர் நிறுவனம் நடுநிலையானது என்ற கருத்தையும் மீறுகிறது.

நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச அனுமதியில்லை, ஊடகங்களும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. டுவிட்டர் மூலம் நாம் நினைத்த கருத்தை முன்வைக்கலாம் என நான் நினைத்தேன். ஆனால், அதுவும் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. அதுவும் ஆட்சியாளர்கள் சொல்வதை கேட்கிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply