சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு – மோகன் பகவத்துக்கு அச்சம் – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி (25 அக் 2020): சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு தெரியும் ஆனால் அதனை வெளியில் சொல்ல பயப்படுகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மோகன் பகவத், விஜய தசமி நிகழ்ச்சியின் தனது உரையில் சீனாவின் பிரச்சினையை குறிப்பிட்டுப் பேசினார். அப்போது “சீனா எவ்வாறு இந்திய எல்லையை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளது என்பதை உலகம் அறிந்திருக்கிறது. அவர்கள் தைவான், வியட்நாம், மெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் போராடி தோல்வி அடைநனனர்  ஆனால் . இந்தியாவின் தாராள மனதை ஒரு பலவீனம் என்று தவறாக புரிந்து கொண்டனர் ” என்றார்

மேலும் சீனாவுக்கு எதிராக அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து படம் புகட்ட வேண்டும், என்றும் மோகன் பகவத் அழைப்பு விடுத்தார்.

மோகன் பகவத்தின் உரையை அடுத்து ராகுல் காந்தி ” மோகன் பகவத்  உண்மையை அறிவார். ஆனால் அவர் உண்மையை எதிர்கொள்ள பயப்படுகிறார். சீனா இந்திய நிலத்தை கையகப்படுத்தியது உண்மைதான். இதைத்தான் மோகன் பகவத் ஒப்புக் கொண்டுள்ளார் ”என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

ஹாட் நியூஸ்: