டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் ஆகியோர் புகழ் மங்கிவிட்டது – ராஜ் தாக்கரே விமர்சனம்!

மும்பை (07 பிப் 2021): லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் புகழ் மங்கிவிட்டதாக மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,” விவசாய பிரச்சினை அரசாங்கத்தின் ஒரு விஷயம். இதற்கும் நாட்டு பற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்று தாக்கரே கூறியுள்ளார்.

நாட்டின் முன்னணி விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களின் அரசாங்க சார்பு ட்வீட்டுகள் பல விமர்சனங்களை ஈர்த்துள்ளன. இந்நிலையில் ராஜ்தாக்கரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அக்‌ஷய் குமார் போன்றவர்கள் விமர்சனங்களை சந்தித்தவர்கள். அனால் லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பாரத ரத்னா வென்றவர்கள். இவர்கள் அனைத்து இந்திய மக்களின் அடையாளம். அவர்கள் இவ்வாறு அரசுக்கு ஆதரவாக கருத்து கூறுவது ஏற்புடையதல்ல. தற்போது அவர்கள் கேலிக்கு உள்ளாகியுள்ளனர். என்றார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ரிஹானா, கிரேட் துன்பெர்க் உள்ளிட்ட முக்கிய நபர்களின் ட்வீட்டர் பதிவுகள் உலக அளவில் கவனம் ஈர்த்தது.

ஆனால் இந்தியாவின் விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் அரசுக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக ட்வீட் செய்துள்ளனர். இது மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் பதிவு செய்யப்பட்டதாக பரவலாகக் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. .

ஹாட் நியூஸ்: