விலை பேசும் பாஜக – கூவத்தூர் ஸ்டைலில் எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் அடைப்பு!

313

ஜெய்ப்பூர் (11 ஜூன் 2020): ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையில் ராஜஸ்தானில் முழு அளவிலான அரசியல் போர் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக ரூ.25 கோடியை வழங்குவதாகக் கூறியுள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

இதனை அடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு, மத்திய பிரதேச காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர், ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் சேர்ந்தார், இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இப்போது, அசோக் கெஹ்லாட்டுக்கும் பாஜகவால் இதே நிலை உருவாகியுள்ளது.