இராஜஸ்தான் நெருக்கடி..? பரிதவிப்பில் பா.ஜ.க., குழப்பத்தில் காங்கிரஸ்!

292

ஜெய்ப்பூர் (15 ஜூலை 2020): “பா.ஜ.க.-வுக்கு தாவப் போகின்றார், தனிக்கட்சி தொடங்கப் போகின்றார்” என்று கடந்த த்திலிருந்து தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வரும் இராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் அப்பதவியிலிருந்து நீக்கபட்டுள்ளார். அதுமட்டுமல்ல மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்ட அவருக்குப் பதிலாக கோவிந்த் சிங் தோஸ்தரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்குப் பதிலடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உண்மைக்கு சங்கடங்கள் ஏற்படுத்தலாம், ஆனால் அதனை தோற்றகடிக்க இயலாது’ என்று பதிவிட்டுள்ளார் சச்சின்.

பைலட்டு-க்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக காட்டும் வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டதற்கு பதிலடியாக இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ‘சச்சின் பைலட் கைகளில் எதுவும் இல்லை.பா.ஜ.க.-தான் இந்த நாடகத்தை நடத்துகின்றது’ என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  மன்மோகன் சிங் இப்போது பிரதமராக இல்லாததை உணர்கிறோம் : ராகுல் காந்தி ட்வீட் !

காங்கிரஸ் மேலிடத்திலிருந்து தனக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் குறித்து பைலட் அதிருப்தியில் இருப்பதாகவும் அவருக்கு குறைந்தது 20 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், பா.ஜ.க. பக்கம் சாய்வது குறித்து பைலட்-இடமிருந்து எந்த சமிக்ஞையும் இல்லாததும், அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் முதல்வர் கெலோட் தலைமைக்கு ஆதரவாக இருப்பதாலும்தான் பா.ஜ.க.-வால் ம.பி.-ஐப் போன்று இராஸஜ்தானில் குதிரைப்பேர நாடகத்தை அவசரமாக அரங்கேற்ற முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.