நீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா!

புதுடெல்லி (22 செப் 2020):மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட எம்பிக்கள் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் 8 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணாவில் நேற்று ஈடுபட்டனர். இந்த நிலையில், இரவு முழுவதும் காந்தி சிலை முன்பே அமர்ந்த எம்.பிக்கள், தங்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனவும் உறுதிபட கூறியுள்ளனர்.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....