முஹம்மது ஜுபைர் கைதும் பின்னணியும்!

Share this News:

புது டெல்லி (28 ஜூன் 2022): பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர், மத உணர்வை புண்படுத்தியதால் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினாலும் உண்மை வேறு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான AltNews இன் இணை நிறுவனர் முஹம்மது ஜுபைர் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் முஹம்மது நபி குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா-வின் உரையை உலகறியச் செய்தவர் முஹம்மது ஜுபைர்.

பாஜக-வின் சர்ச்சை தொடர்பாக அரபுலகம் உட்பட உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பாஜக இதற்காக வருத்தம் கோரியிருந்தது. இந்த நிகழ்வு பாஜகவிற்கு பெருத்த அவமானத்தைப் பெற்றுத் தந்தது. இதனால் பாஜக முஹம்மது ஜுபைர் மீது கடும் அதிருப்தியில் இருந்தது.

அச்சமயத்திலேயே மத்திய பாஜக அரசு, ஜுபைர் மீது எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கலாம் என்ற கருத்து சமூக ஆதரவாளர்களிடையே நிலவியது. எனினும் அவர் தொடர்ந்து உண்மை தகவல்களை வெளியிட்டு வந்தார். இது பாஜகவுக்கு பெரிய தலைவலியாக இருந்தது.

சமூக ஊடகங்களிலும் ஜுபைருக்கு ஆதரவு பெருகியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜுபைருக்கு எதிராக பழைய பதிவொன்றை தேடி எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் உண்மை என்னவென்றால், 1983 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தித் திரைப்படமான கிஸ்ஸி சே நா கெஹ்னா –  திரைப்படத்தின் காதல் நகைச்சுவையின் கிளிப்பையே அவர் மார்ச் 24, 2018 அன்று பதிவிட்டிருந்தார். இந்த பழைய இடுகை மத உணர்வை துன்புறுத்தியதாக @balajikijaiin என்ற பக்தர் ட்விட்டரில் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு வருடங்கள் கடந்த பின்னர் அதிரடியாக இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் ஜுபைர்.

ஆனால் ஜுபைர் கைதுக்கான பின்னணி, நுபுர் சர்மாவின் முஹம்மது நபிக்கு எதிரான அவதூறு கருத்தை சமூக ஊடகங்கள் மூலம் உலகறிய செய்ததே என்றும் #IstandWithZubair என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளன.


Share this News:

Leave a Reply