அரை நிர்வாண உடையில் ரெஹானா ஃபாத்திமா – போலீசார் வழக்கு பதிவு!

299

திருவனந்தபுரம் (25 ஜூன் 2020): சர்ச்சைக்கு பெயர்போனா பாத்திமா ரெஹானா என்ற பெண் தற்போது அரை நிர்வாண உடையில் ஒரு புகைப்படத்தை இட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பையடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர்.

அதேபோல செயற்பாட்டாளராக தன்னை காட்டிக் கொள்ளும் பாத்திமா ரெஹானா என்ற பெண்ணும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இதைப் படிச்சீங்களா?:  ஒரே நாளில் அதிக உச்சத்தை தொட்டது, கொரோனா- பாதிப்பு!

இப்போது வேறொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஃபாத்திமா ரெஹானா. அதாவது தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு யூடியூப் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ #BodyArtPolitics என்ற ஹேஷ்டேக்குடன் ‘பாடி அண்டு பாலிடிக்ஸ்’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

இதனால், கேரளாவில் சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராத வகையில் அவர் மீது திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பாத்திமா ரெஹானா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.