ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இன்று முதல் RTPCR சோதனை கட்டாயம்!

Share this News:

புதுடெல்லி (01 ஜன 2023): இன்று முதல், கோவிட்-19 பரவல் அதிகமாக உள்ள ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஆர்.டி.பி.சி.ஆர் முடிவை ஏர் சுவிதா போர்டல் மூலம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். இன்று முதல் விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்.

ஏற்கனவே விமான நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 5,666 மாதிரிகளில் இதுவரை 53 பயணிகளுக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், இந்தியாவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, பல ஆசிய நாடுகளில் கோவிட் அலை தாக்கிய 30-35 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கோவிட் விகிதம் அதிகரித்தது. இந்த நிலையில் விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply