100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!

Share this News:

லூதியானா (26 மே 2020): 100 கிலோமீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் பிந்தியா மற்றும் அவருடைய கணவர் ஜதின் ராம் ஆகியோர் வேலை செய்துவந்துள்ளனர்.

20 வயதைக் கடந்திருக்கும் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கின் காரணமாக 50 நாள்களுகும் மேலாக வேலையின்றி தவித்த அவர்கள், சொந்த ஊர் செல்வதற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நடக்கத் தொடங்கினர். 9 மாத கர்ப்பிணி பிந்தியாவை, அவரது கணவர் ஜதின் ராம் நடத்தி அழைத்துச் சென்றுள்ளார்.

பஞ்சாபிலிருந்து 100 கி.மீ தூரம் நடந்து ஹரியானா மாநிலம் அம்பாலா நகரை அடைந்திருந்த நிலையில், பிந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர், அங்கிருந்த காவல்துறையின் உதவியுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பிந்தியா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்து சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டது. போதிய ஊட்டச் சத்து இல்லாத காரணத்தால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share this News: