இந்திய விமானப்படையின் முதல் முஸ்லிம் பெண் வீரர் சானியா மிர்சா!

Share this News:

லக்னோ (23 டிச 2022): இந்திய விமானப்படையில் போர் விமானி ஆன முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

உத்திர பிரதேசம் மிர்சாபூரை சேர்ந்த சானியா மிர்சா, இந்த அரிய சாதனையை படைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) தேர்வில் சானியா 149 வது ரேங்குடன் விமானப் படையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதல் பெண் போர் விமானி என்ற பெருமையையும் சானியா பெற்றுள்ளார்.சானியா ஏப்ரல் 10ம் தேதி என்டிஏ தேர்வு எழுதினார். நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விமானம் ஓட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பெண்களில் சானியாவும் ஒருவர். டிசம்பர் 27-ம் தேதி புனேவில் நடைபெறும் என்டிஏ பயிற்சியில் சானியா சேருகிறார்.

“சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் யுபி போர்டு மாணவிகள் மட்டுமல்ல, சாதாரன பள்ளியில் படித்த சானியா, தன்னம்பிக்கை இருந்தால் எவரும் வெற்றிபெற முடியும்” என்கிறார் சானியா.

சானியா மிர்சாவின் தந்தை ஷாஹித் அலி ஒரு டிவி மெக்கானிக். சானியா வாழ்ந்த கிராமத்தில் ஆரம்பம் முதல் 10 ஆம் வகுப்பு வரை பண்டிட் சிந்தாமணி துபே இன்டர் கல்வி நிலையத்தில் சானியா படித்தார் படித்தார். பிளஸ் டூவில் உ.பி வாரியத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

பெண்களை ஊக்குவிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தேசத்திற்கான சேவை என்பது வெறும் ஆசையல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில் போர் விமானிகளில் பெண்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் முயற்சியில் சீட் கிடைக்காவிட்டாலும், இரண்டாவது முயற்சியில் இடம் கிடைத்துவிட்டதாக சானியா பெருமிதத்துடன் கூறுகிறார்.


Share this News:

Leave a Reply