கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு ஆயுள் தண்டனை கைதி ஜாமீனில் விடுதலை!

அஹமதாபாத் (15 டிச 2022): 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஃபாரூக்கிற்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது,

அவர் கடந்த 17 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். ஃபரூக்கின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது வரை உள்ள காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடினார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இது விசாரணைக்கு வந்தது.
.
அதேவேளை பலரது தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: