ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது குற்றமல்ல – மும்பை நீதிமன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைப்பு!

புதுடெல்லி (27 ஜன 2020): ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல என்ற மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை டெல்லி உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது   நபர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை  மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ளார்.

இது தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது.
குற்றவாளியை போஸ்கோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தரப்பில் விவாதிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி புஷ்பா கனேடிவாலா போஸ்கோ சட்டத்தின்கீழ், குற்றவாளி பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஏற்க முடியாது என்று  உத்தரவிட்டார். நாக்பூர் பெஞ்சின் நீதிபதி புஷ்பா வி கணேடிவாலா இந்த வினோதமான உத்தரவை பிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச் இதனை விசாரித்தது. இதனை அடுத்து மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இரண்டு வாரங்கள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் இதுபோன்ற தீர்ப்புகள் தவறான முன்மாதிரியை உருவாக்கும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

ஹாட் நியூஸ்: