ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Supreme court of India
Share this News:

புதுடெல்லி (29 ஜூன் 2021): ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மத்திய அரசு மானிய விலையில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை மாற்றி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கார்டு இருந்தால் ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் இடம் பெயர்ந்த மக்கள் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் தவித்தனர். அவர்களுக்கு இது உதவியாக இருக்கும். எனினும் இத்திட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, அனைத்து மாநிலங்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த முன்வர வேண்டும். ஜூலை 31ஆம் தேதிக்குள் இந்த திட்டம் அமலுக்கு வர வேண்டும். அதற்கு முன்னதாக இடம் பெயர் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாநிலங்களும் உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கான உணவுப் பொருட்களை மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிய அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மத்திய அரசே இடம் பெயர் தொழிலாளர்களுக்காக தனி இணையத்தளத்தை உருவாக்கி அதில் தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை இடம் பெயர் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநிலங்கள் சமுதாய சமையல் கூடங்கள் ஏற்படுத்தி உணவு தயாரித்து வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Share this News:

Leave a Reply